Monday, November 28, 2011

அன்னிய முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம்

புதுடில்லி,: அன்னிய நிதி நிறுவனங்கள், முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடுகளின் வரிசையில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என, ஆய்வு நிறுவனமான எர்னஸ்ட் அண்டு யங் தெரிவித்துள்ளது.இந்தியா, உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையை எதிர் கொண்டு சிறந்து விளங்குகிறது. மேலும், இதர நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக, வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உகந்த நாடாக, இந்தியா சிறந்து விளங்குகிறது என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2004-05ம் நிதியாண்டு முதல், 2010-11ம் நிதியாண்டு வரையிலுமாக, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 31.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 88 ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்துள்ளது.குறிப்பாக, இந்திய ராணுவத் துறை, அடுத்த 4-5 ஆண்டுகளில், 8,000 கோடி டாலர் மதிப்பிற்கு செலவிட உள்ளது. இதில், 65-70 சதவீத ராணுவ தளவாடங்கள், சர்வதேச நாடுகளில் இருந்து வாங்கப்படவுள்ளன.2020ம் ஆண்டிற்குள், இந்தியாவின் வாகன உற்பத்தி, மூன்று மடங்கு வளர்ச்சி காணும். இதே போன்று, மோட்டார் வாகன உதிரிபாகங்கள் துறையின் வளர்ச்சி தற்போதைய, 3,000 கோடி டாலரில் இருந்து, 11,000 கோடி டாலர் மதிப்பிற்கு அதிகரிக்கும். இத்துறைகள் அதிக அளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும்என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.